நட்பு


இது சொந்தமும் இல்லை தலை முறை பந்தமும் இல்லை,
கேள்விகள்  இன்றி விடை கண்டறியும் தேவையும் இன்றி,
விதி வழி என்று செல்லாமல் நீ காண்பிப்பதே ஒளி என்று சொல்லி,
உறவு என்ற கர்வமும் அல்லாது,
காதல் என்ற ஆளுமையும் இல்லாது,
எப்பிறவியிலும் ஒன்றாய் இருந்திட தோன்றிய உறவே நட்பு...

காதலன் கடிதம்

விழித்தது கண்கள் விழிக்காமல் வந்தது உன்  காதல்,
அழைத்தது உன் விழிகள் அழைக்காமல் போனது என் நட்பு,
தொடர்ந்தது  உன் மோகம், தொடராமல் போனது  என் படிப்பு,
கடந்து போனது நீ, கடந்தே போனது  என் வயது,
கலங்க வைத்தவள் நீ , கலங்கரையில் நான்,
இன்று என் உயிர் என்னிடத்தில் இல்லை,
நாளை உன்னை நேசிக்க ஓர்  உயிரும் இல்லை...

உன்னுள் நான்...

உன்னை ரசிப்பதில் உன் அரை கண்ணாடிகள் கூட என்னிடம் தோல்வியுறும்,
நீ என்னிடம் கொஞ்சப்பட்ட அளவு, எந்த மழலையும் கொஞ்சப்பட்டிருப்பது அறிதே,
உன் மெல்லிய உடல்வாகுக்கு காரணமாய் இருப்பது, என் நினைவலைகள் உண்டாக்கிய விக்கல்களே,
உனக்கு துணையாய் இருப்பவர்களுள் நான் உன் நிழலுக்கு அடுத்தபடி,
உனக்காக காத்திருந்த நேரம், அரசுப் பணிக்காக காத்திருக்கும் எந்த பட்டதாரியின் நேரத்தையும் முறியடிக்கும்,
உன்னை புகழ்ந்த பொய்களின் எண்ணிக்கையில் முதலிடம் எனக்கே ,
எனினும் உன்னை சிந்திக்க வைப்பதில் என் தோல்வியை மகிழ்ச்சியுடன் ஒப்பு கொள்கிறேன்,
உன் சகோதரன் பட்டியலில் சேர்ந்து விட கூடாதென்பதற்காக!!!

பாரதி கண்டிராத புதுமை பெண்!!!

அடுப்பூதும் கைகளில் அனல் பறக்கும் புகையிலை,

உடன் கட்டை ஒழித்திட தற்காலிக சொந்தம் ,

சமத்துவத்தை நிலைத்திட பொது விடுதி...

மறக்க நினைக்கிறேன்

சில நேரங்களில் உன்னை மறந்து விட்டால் நிம்மதி என்று தோன்றும்,
ஆனால் சற்று நேரம் கழித்து என் நிம்மதி தொலைந்து போகும்...

மறுத்தேன்

உன்னை பார்த்த என்னுடைய கண்கள் மூட மறுத்தது,
என் இதய துடிப்பு நின்ற பிறகும்..

காதல்

மேகம் நீங்கினால் வானம் ,
பெண்ணின் நாணம் நீங்கினால் காதல்...

பெண்ணிற்கு நீ

ஒரு பெண் உன் மீது நம்பிக்கை வைக்கும் போது,
நீ அவள் நண்பன் ஆகிறாய்,
ஒரு பெண்ணை நீ சிரிக்க வைக்கும் போது,
நீ அவள் மனதில் குடியேருகிர்றாய்,
ஒரு பெண் உன்னை பற்றி சிந்திக்கும் போது,
நீ அவள் காதலானகிறாய்,
ஒரு பெண் உன்னிடம் தன் சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ளும்போது,
நீ அவள் கணவனாகிறாய்,
ஒரு பெண்ணிற்கு நீ வழிகாட்டியாய் இருக்கும் போது,
நீ அவள் தந்தை ஆகிறாய்,
ஒரு பெண் உன்னை பற்றி பேசும் போது,
நீ மனிதன் ஆகிறாய்,
அவளே உன்னை போற்றும் பொழுது,
நீ தெய்வம் ஆகிறாய்...

உன்னுள் நீ

உன்னுள் உணர்வுகள் இருக்கும் வரை நீ ரசிக்கபடுவாய்..
உன்னுள் முயற்சி இருக்கும் வரை நீ பேசப்படுவாய்..
உன்னுள் தைரியம் இருக்கும் வரை நீ போற்றபடுவாய்..
உன்னுள் இறக்கம் இருக்கும் வரை நீ வாழ்தபடுவாய்..
உன்னுள் காதல் இருக்கும் வரை நீ நேசிக்கபடுவாய்...

பெண்ணே உனக்காக

பென்சில் பிடிக்க வேண்டிய கைகளில் உனக்காக
பட்டாம் பூச்சிகளை பிடித்து வந்தேன்,
வானவில்லின் வண்ணங்களை கண்டு ரசிக்கும் பருவத்தில்
நீ அணிந்து வந்த தாவணியின் வண்ணங்களை ரசித்தேன்,
பாட பிரிவுகளை தேர்வு செய்ய வேண்டிய காலங்களில்
நீ கன்னிகையாக தேர்ச்சி பெற்றதற்கான காரணங்களை தேடினேன்,
உன் மனதில் இடம் பிடிக்க என் மனதில்
புகையினை புதைத்தேன்,
என் கனவுகளை உன்  பெண்மையை மெருகூட்டும் சேலையில் தொலைத்தேன்...

பிறிவு

கண்ணுக்குள் நீ இருந்தால் பெண்ணே கண்ணீரும் வருவதில்லை ,
நெஞ்சுக்குள் நீ இருந்தால் கண்ணே கலக்கமும் எனக்கில்லை,
முற்களாக நீ இருந்தால் கூட பெண்ணே
உன்னை அனைக்காமல் இருக்க முடிவதில்லை,
சிற்பமாக நீ இருந்தால் கூட கண்ணே
பிறர் உனை ரசிப்பதை என் மணம் ஏற்பதில்லை,
நீ எனக்கில்லை என்றான போதும் பெண்ணே
என் நினைவு உன்னை விடுத்து செல்வதில்லை...